» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியாவின் வெற்றி தினவிழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் : மத்திய அரசு அறிவிப்பு
வியாழன் 1, மே 2025 12:27:35 PM (IST)
ரஷியாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
2-ம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படைகளை சோவியத் யூனியன் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடிக்கு ரஷியா அழைப்பு விடுத்திருந்தது. எனினும், ரஷியாவின் இந்த வெற்றி தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார். இதனை ரஷியாவின் அதிபருக்கான செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதுபற்றி ரஷியாவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், மாஸ்கோவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்தியா சார்பில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொள்வார் என இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் நேற்று உறுதிப்படுத்தி உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்: மாஸ்கோவில் ரஷிய அரசிடம் இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்!
வெள்ளி 23, மே 2025 4:37:27 PM (IST)

சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
வெள்ளி 23, மே 2025 12:20:10 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா? ஜெய்சங்கர் விளக்கம்!
வியாழன் 22, மே 2025 5:48:39 PM (IST)

காசாவில் மக்கள் உணவின்றி தவிப்பு! மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்: போப் லியோ
வியாழன் 22, மே 2025 5:27:06 PM (IST)

இலங்கையில் இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு
புதன் 21, மே 2025 11:02:26 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார்: ட்ரம்புடன் பேசிய ரஷ்ய அதிபர் அறிவிப்பு!
புதன் 21, மே 2025 10:28:05 AM (IST)
