» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி

வெள்ளி 23, மே 2025 12:20:10 PM (IST)


சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரத்தின் மேற்கூரை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று பெங்யாங் கோபுரம் ஆகும். 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோபுரத்தைக் காண தினமும் நூற்றுக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

ஏராளமானோர் அங்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் திடீரென அதன் மேற்கூரை சரிய தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சற்றுநேரத்தில் அந்த கோபுரத்தின் மேற்கூரை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த பெங்யாங் கோபுரம் கடந்த 1995-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது மேற்கூரை இடிந்து விழுந்ததால் உள்ளூர் நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory