» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு
புதன் 21, மே 2025 11:02:26 AM (IST)

இலங்கையில் இறுதிகட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுக்கும் பதவி உயா்வு வழங்கி அதிபா் அநுர குமார திசநாயக உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த இறுதிகட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுக்கும் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபா் அநுர குமார திசநாயக செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் விடுதலைப் புலிகள் நடத்திய பிரிவினைவாதப் போா் ஒரு பெரும் துயரம் எனவும், அது முடிவுக்கு வந்ததன் 16-ஆவது ஆண்டு தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு பதவி உயா்வு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுபான்மை தமிழா்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களைத் தொடா்ந்து, அவா்கள் அதிகம் வசிக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தனி ஈழ நாடு கோரி விடுதலைப் புலிகள் அமைப்பினா் 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா்.
இந்த உள்நாட்டுச் சண்டை கடந்த 2009 மே 18-ஆம் தேதி நிறைவடைந்த இறுதிகட்டப் போரில் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பிலும் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும்: நியூயார்க் மேயர் பேச்சுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்!
செவ்வாய் 8, ஜூலை 2025 12:31:45 PM (IST)

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்புகண்டனம்
திங்கள் 7, ஜூலை 2025 5:20:18 PM (IST)

அமெரிக்காவை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்: கோடை முகாமில் தங்கியிருந்த 25 சிறுமிகள் மாயம்
ஞாயிறு 6, ஜூலை 2025 11:15:35 AM (IST)

பல ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி: நீரவ் மோடியின் சகோதரர் அமெரிக்காவில் கைது!
சனி 5, ஜூலை 2025 4:36:42 PM (IST)

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 11:55:30 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500% வரி: அமெரிக்கா முடிவுக்கு ஜெய்சங்கர் கருத்து!
வியாழன் 3, ஜூலை 2025 5:48:03 PM (IST)
