» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பஹல்காம் தாக்குதல்: நேபாளத்தில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம்!
சனி 26, ஏப்ரல் 2025 4:37:09 PM (IST)
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்திலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காமில் கடந்த ஏப்.22 ஆம் தேதியன்று சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்தத் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டிலுள்ள பாகிஸ்தானின் தூதரகம் முன்பு நாகாரிக் யுவா சக்தி நேபாள் எனும் அமைப்பைச் சேர்ந்த பலர் இன்று (ஏப்.26) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் தாக்குதலில் பலியான அந்நாட்டைச் சேர்ந்த சுதீப் நியூபானே (27) என்பவரின் புகைப்படம் மற்றும் பதாகைகளைக் கையில் ஏந்தி, 'பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும்’, ’ஹிந்துக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்’ ஆகிய முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்
சனி 26, ஏப்ரல் 2025 12:21:09 PM (IST)

இந்திய-பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐநா வேண்டுகோள்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:33:40 PM (IST)

சிந்து நதி நீரை நிறுத்தியது போர் நடவடிக்கை: பாகிஸ்தான் எச்சரிக்கை!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:02:13 PM (IST)

கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை : பாகிஸ்தான் அரசு உத்தரவு
வியாழன் 24, ஏப்ரல் 2025 12:19:32 PM (IST)

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்: நெதன்யாகு
புதன் 23, ஏப்ரல் 2025 3:50:45 PM (IST)

ஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்பு இல்லை : பாகிஸ்தான் அமைச்சர் சொல்கிறார்
புதன் 23, ஏப்ரல் 2025 11:41:14 AM (IST)
