» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை : பாகிஸ்தான் அரசு உத்தரவு

வியாழன் 24, ஏப்ரல் 2025 12:19:32 PM (IST)

ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க இந்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலால் கடும் கோபம் அடைந்த இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாக்கி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கராச்சி கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஏவுகணை சோதனையை நடத்த பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. தரையில் இருந்து சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த திடீர் நடவடிக்கையை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பாகிஸ்தான் போருக்கு தயாராக இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக இந்த ஏவுகணை சோதனையை நடத்த முடிவு செய்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா ஒருவேளை ராணுவ நடவடிக்கை எடுத்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து பாகிஸ்தான் ஆலோசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தியிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள கணக்கு இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory