» செய்திகள் - விளையாட்டு » உலகம்

டித்வா’ புயல் பாதிப்பு: இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் நிவாரணம்

திங்கள் 22, டிசம்பர் 2025 10:20:10 AM (IST)



டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழா்களுக்கு இந்திய தூதரகம் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதுதொடா்பாக இலங்கைத் தலைநகா் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஆபரேஷன் சாகா் பந்துவின் கீழ் இந்தியா தொடா்ந்து உதவி புரிந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக கொழும்பின் கொல்லானவ பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், இஸ்கான் கோயில் வளாகத்தில் உள்ள குழந்தைகள் இல்லம், கம்பஹா மாவட்டத்தில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காகவே ஒதுக்கப்பட்ட நயனலோககம கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இலங்கைக்கான இந்திய தூதா் சந்தோஷ் ஜா நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

கண்டி, நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை கண்டியில் உள்ள இந்திய உதவி தூதரகம் வழங்கியது. மன்னாா், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் நிவாரணப் பொருள்களை அளித்தது என்று தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory