» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரன்: துப்பாகியை பறித்த நபருக்கு குவியும் பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:55:17 AM (IST)

சிட்னியில் மக்களை சுட்டுக்கொன்ற கொடூரனிடம் இருந்து துணிச்சலாக செயல்பட்டு துப்பாக்கியை பறித்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிகவும் பிரபலமானதாகும். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் கடற்கரையில் யூதர்கள் நிகழ்ச்சீ நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவை உலுக்கிய இச்சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அதிர்ச்சி தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து அந்நாட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தந்தை - மகன் என தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயது சஜித் அக்ரம் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மகனான 24 வயது மகன் நவீத் அக்ரம் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மீது பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிய அகமத் அல் அகமதுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அகமதுவின் உறவினர் முஸ்தஃபா, "அகமத் ஒரு ஹீரோ என்றும், இரு இடங்களில் குண்டடிப்பட்ட அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு: 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 7:08:36 PM (IST)

டிரம்ப்பின் கோல்டு கார்டு விசா திட்டத்துக்கு தடை கோரி அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!
சனி 13, டிசம்பர் 2025 12:46:26 PM (IST)

பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் தேர்தல் நடத்த தயார்: டிரம்ப் புகாருக்கு ஜெலன்ஸ்கி பதிலடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:46:04 PM (IST)

ஜகார்த்தாவில் தனியார் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து : கர்ப்பிணி உள்பட 20 பேர் சாவு
புதன் 10, டிசம்பர் 2025 8:45:58 AM (IST)

புதின் வருகை எதிரொலி : இந்திய அரிசிக்கு வரியை இரட்டிப்பாக டிரம்ப் பரிசீலனை!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:27:29 AM (IST)

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு ரூ.1,250 கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம் நடவடிக்கை
சனி 6, டிசம்பர் 2025 4:43:51 PM (IST)


.gif)