» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்திய-பாகிஸ்தான் அரசுகள் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்: ஐநா வேண்டுகோள்
வெள்ளி 25, ஏப்ரல் 2025 12:33:40 PM (IST)

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக், "அவர் (ஐ.நா. பொதுச்செயலாளர்) எந்த நேரடித் தொடர்பையும் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் தெரிவித்தோம். இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனினும், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்க முடியும் என்றும், தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இங்கிலாந்தில் புலம்பெயர்ந்தோர் குடியேற்றத்துக்கு எதிராக பொதுமக்கள் மாபெரும் போராட்டம்!!
திங்கள் 15, செப்டம்பர் 2025 11:33:58 AM (IST)

பின்லேடன் உங்கள் நாட்டில்தான் கொல்லப்பட்டார் : ஐ.நா. சபையில் பாக். மீது இஸ்ரேல் தாக்கு!
சனி 13, செப்டம்பர் 2025 5:04:44 PM (IST)

ரஷியாவில் ரிக்டர் 7.4 அளவில் பயங்கர நிலநடுக்கம்
சனி 13, செப்டம்பர் 2025 12:34:05 PM (IST)

நேபாள இடைக்கால பிரதமராக சுசிலா கார்க்கி பதவி ஏற்பு: 6 மாதத்தில் தேர்தல் நடத்த முடிவு
சனி 13, செப்டம்பர் 2025 10:39:31 AM (IST)

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தை நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு
சனி 13, செப்டம்பர் 2025 10:34:56 AM (IST)

சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவல் அளித்தால் ஒரு லட்சம் டாலர் சன்மானம்!
வெள்ளி 12, செப்டம்பர் 2025 12:37:14 PM (IST)
