» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்பு இல்லை : பாகிஸ்தான் அமைச்சர் சொல்கிறார்

புதன் 23, ஏப்ரல் 2025 11:41:14 AM (IST)

"பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை" என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும் இது இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று தெரிவித்துள்ளது. 

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், "பாகிஸ்தானுக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை. இது அனைத்தும் அவர்களின் (இந்தியாவின்) உள்நாட்டில் உருவான பிரச்சனை. இந்திய மாநிலங்களில் அந்நாட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் உருவாகி உள்ளன.

ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கான கிளர்ச்சிகள். நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கிலும், சத்தீஸ்கரிலும், மணிப்பூரிலும் கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்நாட்டின் எல்லா இடங்களிலும் இந்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory