» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவுடன் தைவான் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: அதிபர் ஜின்பிங் உறுதி!
வெள்ளி 2, ஜனவரி 2026 10:16:45 AM (IST)
தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனி நாடாகப் பிரிந்தது. ஆனால் தைவானை இன்னும் தனது நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதி வருகிறது. எனவே அதனை மீண்டும் தன்னுடன் இணைப்பதற்காக சீனா போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் சீனா பதற்றத்தைத் தூண்டுகின்றது. தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தைவான் எல்லைக்குள் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தையும் தூண்டுகிறது. கடந்த வாரம் சீனா தைவான் எல்லையைச் சுற்றிலும் கூட்டு ராணுவ பயிற்சியை நடத்தியது.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தைவானை தனது நாட்டின் தன்னாட்சி பிராந்தியமாகவே சீனா கருதுகிறது. தற்போது அதனை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே தைவான் விரைவில் சீனாவுடன் இணைவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
திங்கள் 9, மார்ச் 2026 11:38:21 AM (IST)

ஈரான் நிபந்தனையின்றி சரண் அடைய வேண்டும்: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஞாயிறு 8, மார்ச் 2026 8:56:43 PM (IST)

வளைகுடா நாடுகளைத் தாக்க மாட்டோம்: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உறுதி
சனி 7, மார்ச் 2026 5:53:56 PM (IST)

அமெரிக்காவிடம் இந்தியா கேள்வி கேட்க வேண்டும்! - ஈரானின் அதிரடி கோரிக்கை!
சனி 7, மார்ச் 2026 11:47:53 AM (IST)

ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்கள் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி!
வெள்ளி 6, மார்ச் 2026 12:17:23 PM (IST)

ஈரானிய போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்: இந்திய துறைமுகம் பயன்படுத்தப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்!
வியாழன் 5, மார்ச் 2026 11:08:13 AM (IST)

