» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை: அமெரிக்காவில் பரபரப்பு

சனி 19, ஏப்ரல் 2025 12:10:16 PM (IST)



அமெரிக்காவில் நடுவானில் கத்திமுனையில் விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அமெரிக்க நாடான பெலிஸ் எல்லையில் உள்ள கோரோஷல் எனும் நகரில் இருந்து சுற்றுலாத்தலமான சான் பெட்ரோவுக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டது. அதில், 14 பயணிகள் மற்றும் 2 விமானிகள் இருந்தனர். நடுவானில் விமானம் பறந்தபோது, திடீரென கத்திமுனையில் ஒருவர், விமானத்தை கடத்தினார். திடீரென அந்த நபர், விமானி உள்பட 3 பேரை கத்தியால் குத்தினார். 

அதனால் பயணிகளில் ஒருவர், தன்னிடம் இருந்து லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால், அந்த நபரை சுட்டு கொன்றார். போலீசார் நடத்திய விசாரணையில், விமானத்தை கடத்த முயன்றது அமெரிக்காவை சேர்ந்த அகின்யேலா சாவா டெய்லர்(49) என தெரியவந்தது. டெய்லர் எப்படி கத்தியை விமானத்திற்குள் கொண்டு வந்தார் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக பெலிசியன் அதிகாரிகள் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory