» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி வழக்கு : மெஹுல் சோக்ஸி பெல்ஜியத்தில் கைது!
திங்கள் 14, ஏப்ரல் 2025 12:01:43 PM (IST)

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வழக்கில் தொழிலதிபா் மெஹுல் சோக்ஸியை பெல்ஜியம் போலீசார் கைது செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவரை நாடு கடத்துவதற்கான பணியை சிபிஐ மேற்கொண்டுள்ளது.
 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த தொழிலதிபா்கள் நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பியோடினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.
 லண்டனில் நிரவ் மோடி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை நாடுகடத்துவதற்கான பணியில் இந்திய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்டிகுவாவில் தஞ்சமடைந்த மெஹுல் சோக்ஸியை கைது செய்வதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக பெல்ஜியம் சென்ற சோக்ஸியை, மும்பை நீதிமன்றத்தின் இரண்டு கைதாணைகளின் அடிப்படையில் அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
 கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சோக்ஸி, பெல்ஜியம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.இதனிடையே, மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி, உடனடியாக பிணை பெறுவதற்கான நடவடிக்கைகளை சோக்ஸி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாக அவரை நாடுகடத்துவதற்கான பணியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
 ஏற்கெனவே, இந்தியாவில் இருந்த நிரவ் மோடி மற்றும் மெஹுல் சோக்ஸியின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இருவருக்கு எதிராகவும் மோசடி வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)

பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் ரூ.898 கோடி பொருட்களை கொள்ளையடித்த 2 பேர் கைது
திங்கள் 27, அக்டோபர் 2025 8:58:03 AM (IST)


.gif)