» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்: கூட்டு அறிக்கை வெளியீடு!

சனி 27, டிசம்பர் 2025 4:02:41 PM (IST)



தாய்லாந்து - கம்போடியா இடையே உடனடி போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே நிலவிய எல்லைப் பிரச்சினை காரணமாக போர் மூண்டது. போர் விமானங்கள், ராக்கெட்டுகள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இரு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதல் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரு தரப்பிலும் இடம் பெயர்ந்து சென்றனர்.

இந்நிலையில், உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த இவ்விரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பான கூட்டறிக்கையில், தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர் நத்தபோன் நக்ரபனிட்-டும், கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் சகா டீ சாய்ஹா-வும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த போர் நிறுத்தம் நண்பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘இரு நாடுகளும் தற்போது நிறுத்தியுள்ள படைகளை எந்த அசைவுகளும் இன்றி பராமரிக்க ஒப்புக்கொள்ளப்படுகிறது. போர் நிறுத்தம் நண்பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வரும். படைகளை வலுப்படுத்தும் எந்த ஒரு முயற்சியையும் யாரும் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு முயல்வது, இயல்பு நிலைக்கான நீண்ட கால முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 20 நாட்கள் நீடித்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory