» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பூமிக்கு வெளியே கே2-18பி கோளில் உயிரினங்கள்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி கண்டுபிடிப்பு!

வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:04:40 AM (IST)



பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

சூரியகுடும்பத்திற்கு வெளியே பூமியில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் கே2-18பி என்ற கோள் உள்ளது. இந்த கோள் பூமியில் இருந்து 700 டிரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோள் பூமியை விட இரண்டரை மடங்கு பெரியதாகும். இந்நிலையில், இந்த கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி டாக்டர் நிக்கு மதுசூதன். இவர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கே2-15பி கோளில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தது. அதில், பூமியில் வாழும் உயிரினங்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் மூலக்கூறான டைமெத்தில் சல்பைடு கண்டறிந்தனர்.

இதன் மூலம் பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞான வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory