» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யாணின் மகன் காயம்

செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:12:10 PM (IST)

சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின்  மகன் காயம் அடைந்தார். 

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண். ஜனசேனா கட்சி தலைவரான இவர் தெலுங்கு திரைத்துறையின் முன்னணி நடிகராகவும் செயல்பட்டு வருகிறார். பவன் கல்யாணுக்கு 8 வயதில் மார்க் சங்கர் என்ற மகன் உள்ளார்.8 வயதான மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில், மார்க் சங்கர் பயின்று வரும் பள்ளியில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மார்க் சங்கர் சிக்கிக்கொண்டான். அச்சிறுவனுக்கு கை, கால்களில் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மகன் தீ விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகன் மார்க் சங்கரை காண பவன் கல்யாண் இன்று சிங்கப்பூர் விரைந்துள்ளார். இதற்காக இன்று அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

பவன் கல்யாண்Apr 9, 2025 - 09:10:57 AM | Posted IP 162.1*****

ஒரு முட்டா கூத்தாடி, காசு இருந்தால் எல்லாம் செய்யலாம், ஒரு கிறிஸ்தவ பெண்ணை மணமுடித்து வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை, இங்கு ஒட்டு போட்ட முட்டா மக்கள் எல்லாம் வாழ்க்கையில் கஷ்டம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory