» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வியாழன் 10, ஏப்ரல் 2025 11:03:53 AM (IST)

சீனாவை தவிர்த்து, 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு உயர்த்தப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு வரியை உயர்த்தினார். இதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் நம் நாட்டு தயாரிப்புகளுக்கான வரி 27 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சீனா இந்த வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை உயர்த்தியது. இதனால், சீனாவுக்கான வரியை, நேற்று முன்தினம் 104 சதவீதமாக உயர்த்தினார். சீனா விடாப்பிடியாக அமெரிக்காவுக்கான வரியை, 84 சதவீதமாக உயர்த்தியது.

இந்நிலையில், சீனாவை தவிர இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு : சீனா உலக சந்தைகளுக்கு காட்டிய மரியாதையின்மையின் காரணமாக, அந்நாட்டுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை, 125 சதவீதமாக உயர்த்தியுள்ளேன். இது உடனடியாக அமலுக்கு வரும். மறுபுறம், 75க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவை அணுகி, பேச்சு நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன.

இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக எந்த விதத்திலும் பதிலடி கொடுக்கவில்லை. எனவே அவர்களுக்கான வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைக்கிறேன். இந்த காலக்கட்டத்தில் 10 சதவீதம் என்ற குறைக்கப்பட்ட பரஸ்பர வரி அமலில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory