» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34% பரஸ்பர வரி விதிப்பு : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வியாழன் 3, ஏப்ரல் 2025 12:12:06 PM (IST)



இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

உலகளவில்  சுமார் 25 நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிமுகம் செய்துள்ளார். இதன்படி எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில்  "இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வ செழிப்பு மிக்க நாடாக மாற்றும் நாளின் தொடக்கம் இது. அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” தெரிவித்தார்.

பிற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் வரியை குறைக்கும் நோக்கில் இந்த பரஸ்பர வரி விதிப்பு முறையை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதிகபட்சமாக கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44%, சீனா 34%, இந்தியா 26%, ஜப்பான் 24%, ஐரோப்பிய யூனியன் 20% மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆட்டோமொபைல் இறக்குமதிக்கு சுமார் 20% பொதுவான இறக்குமதி வரியை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த பரஸ்பர வரி விதிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. ட்ரம்ப்பின் இந்த வரிவிதிப்புக்கு அயர்லாந்து, கனடா என உலக நாடுகள் பலவும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory