» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிக்க மாட்டோம்: உக்ரைன் உறுதி!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:43:26 PM (IST)
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட எந்தப் பகுதியையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என உக்ரைன் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐரோப்பாவின் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் உறுப்பினராக சேர முயல்வதைக் கண்டித்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா போர் தொடுத்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த முடிவும் எட்டப்படாமல் போர் தொடர்ந்து வருகின்றது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தினார்.
அதன்படி முதற்கட்டமாக 30 நாட்கள் போர் நிறுத்தம் கொண்டுவருவது குறித்த முன்மொழிவு வழங்கப்பட்டது. இதற்கு உக்ரைன் சம்மதித்த நிலையில் ரஷிய அதிபர் புதினும் சம்மதிப்பாக மேலோட்டமாக தெரிவித்தார். போரை நிறுத்த புதின் விரும்பவில்லை என்றும் பேச்சுவார்த்தையைத் தள்ளிப்போட புதின் தந்திரம் செய்கிறார் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை டொனால்டு டிரம்பும், புதினும் டெலிபோனில் உரையாட உள்ளனர்.
இதற்கிடையே டெல்லியில் நடந்துவரும் ரைசினா மாநாட்டில் இன்று கலந்துகொண்டு பேசிய உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா போர் நிறுத்தம் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரஷியாவுடனான மோதலுக்கு அமைதியான தீர்வையே உக்ரைன் விரும்புகிறது, ஆனால் எங்கள் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்ய மாட்டோம்.
டொனால்டு டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் இடையேயான டெலிபோன் உரையாடலுக்குப் பிறகு, முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் குறித்த தெளிவான நிலைப்பாடு வெளிப்படும். ரஷியாவுடனான 30 நாள் போர்நிறுத்தம் குறித்த அமெரிக்க முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டது, அமைதி முயற்சியை உக்ரைன் எதிர்க்கவில்லை.
அதே நேரத்தில், உக்ரைன் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்யாது. ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் எந்தப் பகுதியையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம். உக்ரைனைத் தாக்குவதன் மூலம் ரஷ்யா எந்த மூலோபாய இலக்குகளையும் ரஷியா அடையவில்லை என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)

வெளிநாட்டினர், கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய நடைமுறை : அமெரிக்கா அறிவிப்பு
செவ்வாய் 28, அக்டோபர் 2025 5:00:36 PM (IST)


.gif)