» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு: மன்மோகன் சிங்கிற்கு ஜோ பைடன் புகழஞ்சலி

சனி 28, டிசம்பர் 2024 4:49:47 PM (IST)

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், "இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மன்மோகன் சிங் இழப்பு வருத்தம் அளிக்கிறது. மன்மோகனின் தொலைநோக்கு மற்றும் அரசியல் துணிவு இல்லாமல் இந்தியா - அமெரிக்க இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருப்பதற்கு சாத்தியமில்லை. இரு நாடுகளின் வளர்ச்சிக்காக புதிய பாதை அமைத்து, அதை வலுப்பெறச் செய்தவர். அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்குவது, முதல் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பின் நாடுகளுக்கு இடையே குவாட் கூட்டமைப்பு தொடங்குவதற்கு உதவியது வரை, அவர் நமது நாடுகளையும் உலகையும் தொடர்ந்து பல தலைமுறைகளாக பலப்படுத்தும் பாதையை உருவாக்கி தந்ததின் முன்னேற்றத்தையும் பட்டியலிட்டார்.

அவர் ஒரு உண்மையான அரசியல்வாதி. அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவகர். அனைத்தையும் தாண்டி மிகவும் அன்பான, அடக்கமான மனித புனிதர். 2008-ம் ஆண்டு வெளிநாட்டு உறவுகளுக்கான செனட் வெளியுறவு குழுவின் தலைவராகவும், 2009-ம் ஆண்டு அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்த போது துணை அதிபராக பிரதமர் சிங்கை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். 2013-ல் புதுடெல்லியில் அவர் எனக்கு விருந்து அளித்தார். இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அதில் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory