» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதிய கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்கள் அதிரடி குறைப்பு: இலங்கை கல்வித்துறை உத்தரவு!

புதன் 1, ஜனவரி 2025 10:54:19 AM (IST)

இலங்கையில் 2025 புதிய கல்வியாண்டில் பள்ளி வேலை நாட்களை 210 நாட்களில் இருந்து 181 நாட்களாக குறைத்து கல்வித்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பள்ளிகளில் ஜனவரி தொடங்கி அந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் வரை ஒர் கல்வி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. அதன்படி அங்குள்ள பள்ளிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு அந்த நாட்டில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி வேலைநாட்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டது. 

இந்தநிலையில் இந்த ஆண்டின் (2025) கல்வி வேலை நாட்களுக்கான அட்டவணையை கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் பள்ளி வேலை நாட்களை 210 நாட்களில் இருந்து 181 நாட்களாக குறைத்துள்ளது. திருத்தப்பட்ட இந்த அட்டவணை, அங்குள்ள அனைத்து அரசு-தனியார் பள்ளிகள், புத்த துறவி மடாலயங்களுக்கு பொருந்தும். மேலும் வருகிற 27-ந் தேதி முதல் புதிய கல்வியாண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory