» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பெண் குழந்தைகளுக்கான லட்சாதிபதி மகள் திட்டம் அறிமுகம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:13:16 AM (IST)

பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் மற்றும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், ‘டெல்லி லட்சாதிபதி மகள் திட்டம்’ (Lakhpati Beti Yojana) என்ற புதிய திட்டத்தை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இன்று அறிவித்துள்ளார்.
திட்டத்தின் நோக்கம்
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்ததாவது: "டெல்லியின் மகள்களுக்காக இன்று ஒரு உன்னதமான திட்டத்தை நாங்கள் தொடங்கியுள்ளோம். இத்திட்டத்தின்படி, ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் அவர் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, அரசின் சார்பில் பல்வேறு தவணைகளில் மொத்தம் 56 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.”
ஒரு பெண் தனது பட்டப்படிப்பை முடிக்கும்போது, அரசு செலுத்தியத் தொகை மற்றும் அதற்கான வட்டியுடன் சேர்த்து, அவர் கையில் சுமார் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் இருக்கும். இதன் மூலம் டெல்லியின் மகள்கள் கல்வி கற்று முடித்து வெளியே வரும்போது ‘லட்சாதிபதிகளாக’ தன்னம்பிக்கையுடன் வருவார்கள் என்று முதல்வர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
நிதியுதவி வழங்கப்படும் முறைகள்:
நிதி ஒதுக்கீடு அட்டவணை :

பருவம் / வகுப்பு வழங்கப்படும் தொகை
பெண் குழந்தை பிறக்கும்போது ₹ 11,000
1-ம் வகுப்பு முடிக்கும்போது ₹ 5,000
6-ம் வகுப்பு முடிக்கும்போது ₹ 5,000
9-ம் வகுப்பு முடிக்கும்போது ₹ 5,000
10-ம் வகுப்பு முடிக்கும்போது ₹ 5,000
12-ம் வகுப்பு முடிக்கும்போது ₹ 5,000
பட்டப்படிப்பு (Degree) முடிக்கும்போது ₹ 20,000
மொத்த வைப்புத் தொகை ₹ 56,000
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராமர் கோவில் நன்கொடை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்! - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 12:35:16 PM (IST)

விரைவில் அறிமுகமாகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு: ஆர்பிஐ முதல்கட்டச் சோதனை முயற்சி!
செவ்வாய் 21, ஜூலை 2026 11:36:15 AM (IST)

டெல்லியில் சிஜேபி போராட்டம் தீவிரம்: தர்மேந்திர பிரதானுடன் அமித் ஷா அவசர ஆலோசனை!
திங்கள் 20, ஜூலை 2026 5:10:43 PM (IST)

நீட், ராமர் கோவில் விவகாரங்களால் கடும் அமளி : நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
திங்கள் 20, ஜூலை 2026 4:23:28 PM (IST)

இஸ்ரோவில் இருந்து 1,000 விஞ்ஞானிகள் திடீர் விலகல்: குலசேகரப்பட்டினம் ஏவுதள திட்டம் பாதிப்பு?
திங்கள் 20, ஜூலை 2026 11:22:25 AM (IST)

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!
ஞாயிறு 19, ஜூலை 2026 1:30:06 PM (IST)