» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பேய் ஓட்டுவதாகக் கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: கோவில் பூசாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
ஞாயிறு 1, மார்ச் 2026 11:09:07 AM (IST)
பேய் ஓட்டுவதாகக் கூறி 14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கோவில் பூசாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவனந்தபுரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பரவூரைச் சேர்ந்தவர் பினீஷ் (45). இவர் திருவனந்தபுரம் கண்ணம்மூலையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு, 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி ஒருவருக்குத் தேர்வு பயம் காரணமாகப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கவனித்த அவரது பெற்றோர், பயத்தைப் போக்குவதற்காகப் பூசாரி பினீஷிடம் அந்தச் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது பூசாரி பினீஷ், சிறுமிக்குப் பேய் பிடித்துள்ளதாகவும், அதனைப் போக்கத் தனி அறையில் சிறப்புப் பூஜை நடத்த வேண்டும் என்றும் பெற்றோரை நம்ப வைத்துள்ளார். இதனை நம்பிய பெற்றோரும் சம்மதிக்கவே, சிறுமியைத் தனி அறைக்கு அழைத்துச் சென்ற பூசாரி, அங்கு அவருக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்துள்ளார். மேலும், இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகச் சிறுமியை மிரட்டியதுடன், பேய் விரட்டப்பட்டுவிட்டதாகப் பெற்றோரிடமும் பொய் கூறியுள்ளார்.
வீட்டிற்குச் சென்ற சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அங்கு நடைபெற்ற ஆலோசனையின் (Counselling) போது, பூசாரி செய்த கொடுமைகளைச் சிறுமி அழுதுகொண்டே விவரித்தார். இதனையடுத்து, மனநல மருத்துவர் அளித்த புகாரின் பேரில் திருவல்லம் போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு பூசாரி பினீஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவனந்தபுரம் போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எம்.பி. ஷிபு தீர்ப்பளித்தார். அதில்: குற்றவாளி பினீஷுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.மேலும், அவருக்கு ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜே.கே. அஜித் பிரசாத் ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும்: நெதன்யாகுவுடன் மோடி அவசர ஆலோசனை
திங்கள் 2, மார்ச் 2026 5:55:10 PM (IST)

நாக்பூர் வெடிபொருள் தொழிற்சாலையில் கோர விபத்து; 17 பேர் உடல் சிதறி பலி!
திங்கள் 2, மார்ச் 2026 11:34:33 AM (IST)

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!
ஞாயிறு 1, மார்ச் 2026 11:55:03 AM (IST)

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 18 பேர் உடல் கருகி பலி: முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்!
சனி 28, பிப்ரவரி 2026 5:00:11 PM (IST)

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கேஜ்ரிவால், சிசோடியா விடுவிப்பு : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 27, பிப்ரவரி 2026 12:39:03 PM (IST)

ஜப்பானின் பெயரை மாற்ற யோகி சென்றிருக்கிறார்: அகிலேஷ் யாதவ் கிண்டல்!
வியாழன் 26, பிப்ரவரி 2026 5:35:28 PM (IST)

