» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம்: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!

ஞாயிறு 1, மார்ச் 2026 11:55:03 AM (IST)

இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கச்சா எண்ணெய் விநியோகம் இதனால் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. உலகளவில் 20 முதல் 30 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகவே நடைபெறுகிறது. இது உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடமாகக் கருதப்படுகிறது.

தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என்று ஈரான் நீண்டகாலமாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. தற்போது நிலவும் பதற்றமான சூழலில், இந்த வழித்தடத்தை ஈரான் மூடிவிட்டதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்து ஈரான் அரசிடமிருந்து இதுவரை முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த வழித்தடம் மூடப்பட்டால் இந்தியாவிற்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். இதற்கான முக்கிய காரணங்கள்: இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 80 முதல் 90 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலிருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே இந்தியாவிற்கு எண்ணெய் கொண்டு வரப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு ஒரு டாலர் உயர்ந்தால், இந்தியாவின் ஆண்டு எண்ணெய் இறக்குமதிச் செலவு சுமார் ஒரு பில்லியன் டாலர் அதிகரிக்கும். போக்குவரத்து தடைபட்டால் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உடனடியாக உயரும். இறக்குமதிச் செலவு அதிகரிப்பதன் விளைவாக, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் அரசுக்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஏற்படும். இது பொதுமக்களிடையே விலைவாசி உயர்வு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்Mar 1, 2026 - 02:09:20 PM | Posted IP 104.2*****

மறந்துபோவதற்கு அது ஒன்றும் ஒருநாள் வலியல்ல. 2006 இல் ஆரம்பித்த கொடிய இனவழிப்பு யுத்தத்தை 2009 மே 18 இல் இலட்சத்திற்குமேற்பட்ட தமிழர்களை இனவழிப்பு செய்து முடித்துவைத்தார்கள். வெறுமனே சிங்களத்தால் பு லி க ளை வெற்றிகொள்ள முடிந்தது என்று யாராவது சொன்னால் அதை அன்றைய ஜனாதிபதி மகிந்தாவீட்டு நாய்கூட நம்பாது. ( சில தமிழ் நாய்கள் குரைப்பதை பொருட்படுத்தவேண்டாம்) யார் யாரெல்லாம் எம்மை அழித்தார்கள். -முதன்மை இடத்தில் இந்தியா. -அமேரிக்கா. -இஸ்ரவேல் -ஈரான்.. அமேரிக்காவின் சிறப்பு அதிரடிப்படையினர் களமுனைகளில் காணப்பட்டதும், இலங்கைப்படைகளிற்கு பயிற்சிகளை வழங்கியதும் நாம் அறிந்ததுதான். இஸ்ரவேல் போராட்ட ஆரம்பகாலங்களில் இருந்தே தமிழர்களை, தமிழர்களின் போராட்டத்தை அழித்தொழிக்க இலங்கைக்கு வழங்கிய ஆதரவும், உதவிகளும் எண்ணிலடங்காதவை. யாழ்ப்பாணம் பு லி க ளின் கைகளில் விழும் நிலை தோன்றியபோதும், அதன்பின்னர் தொடர்ச்சியாகவும் ஈரான் கடன் அடிப்படையில், மானிய விலையில் வழங்கிய ஆயுதங்கள் ஆயிரமாயிரம் தமிழர்களின் உயிர்களைக்குடித்தது. எம்மை ஒன்றாக சேர்ந்து அழித்தவர்கள் இன்று தமக்குள் மோதி அழிந்துகொண்டிருக்கின்றார்கள். சர்வதேச நீதிமன்றம், ஐ. நா சபை போன்ற மயிராண்டிகள் வழங்க மறுத்த நீதியினை இன்று கர்மா வழங்கிக்கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலின் கண்ணீர் மிக வீரியமானது. அந்த மக்களின் கண்ணீருக்கான பதிலை இன்று காலம் வழங்கிக்கொண்டிருக்கின்றது. எமது அவலக்குரலை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத, அயோக்கிய இலங்கை அரசிற்கு ஆதரவு கொடுத்து எமை அழித்த இந்த நாடுகள் அழிந்தேபோகட்டும்...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory