» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றி: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!
சனி 13, டிசம்பர் 2025 4:19:29 PM (IST)
திருவனந்தபுரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், கேரள மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி நன்றி தெரிவித்து, "கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்களுக்கு எனது நன்றி.கேரளத்தில் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் ஆகியவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஆகையால், நல்லாட்சியை வழங்கவும், அனைவருக்கும் வாய்ப்புகளைக் கொண்ட கேரளத்தை உருவாக்கவும் ஒரே வழி தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே என்று மக்கள் தீர்மானித்தனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை பாஜகவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். திருவனந்தபுரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபட்டு, மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. இருப்பினும், தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜகவே வெற்றி பெற்றது. திருவனந்தபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் 45 ஆண்டுகால வெற்றி வரலாற்றை முறியடித்து, முதன்முறையாக பாஜக வெற்றி பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இண்டிகோ விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது: 2,000+ விமானங்கள் இயக்கம்!
சனி 13, டிசம்பர் 2025 5:42:25 PM (IST)

மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை: விசாரணை நடத்த மம்தா உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 4:35:33 PM (IST)

கேரளத்தில் நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு: 6பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை!
சனி 13, டிசம்பர் 2025 11:17:40 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!
சனி 13, டிசம்பர் 2025 10:51:14 AM (IST)

காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு : மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
சனி 13, டிசம்பர் 2025 10:39:32 AM (IST)

பனிமூட்டத்தால் விமானம் ரத்தானால் கட்டணம் திருப்பி செலுத்தப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:36:29 PM (IST)


.gif)