» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் பிஹாரிக்கள் கொல்லப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? - பிரசாந்த் கிஷோர் கேள்வி

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:47:00 PM (IST)

தமிழகத்தில் பிஹாரின் மைந்தர்கள் கொல்லப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? என்று ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். 

பிஹாரில் வாக்காளர் அதிகார யாத்திரை பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட நிலையில், பிஹாரிக்கள் மீதான அக்கறையில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பிரசாந்த் கிஷோர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிஹார் வந்துள்ளார். இதே பிஹாரின் மைந்தர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்ட போது அவர் எங்கே சென்றிருந்தார்.? அவரின் இந்தத் தன்மை ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவிடமும் இருக்கிறது. அதேபோல் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், "பிஹாரிக்கள் அடிமை வேலை செய்யப் பழக்கப்பட்டவர்கள்.” என்று விமர்ச்சித்தவர்தானே?. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory