» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஐ.டி. ஊழியரை தாக்கிய விவகாரம்: லட்சுமி மேனனை கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 10:58:17 AM (IST)



கொச்சியில் ஐ.டி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் லட்சுமி மேனனை வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் ஒரு பாரில் லட்சுமி மேனன் தரப்புக்கும், ஆலுவாவைச் சேர்ந்த ஐடி ஊழியர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து அன்று இரவு எர்ணாகுளம் வடக்கு ரயில்வே மேம்பாலத்தில், லட்சுமி மேனன் உடன் வந்தவர்கள் ஐ.டி ஊழியரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ஆலுவாவைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில், லட்சுமி மேனன் மற்றும் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட மிதுன், அனீஷ் மற்றும் சோனமோல் ஆகிய மூன்று பேர் ஏற்கனவே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகை லட்சுமி மேனனின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆனது. தற்போது தலைமறைவாக உள்ள லட்சுமி மேனனை கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

இந்த வழக்கில் போலீஸாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் கேட்டு நடிகை லட்சுமி மேனன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தை நாடினார். இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி பெச்சுகுரியன் தாமஸ், வரும் செப்டம்பர் 17-ம் தேதி வரை லட்சுமி மேனனை கைது செய்ய கூடாது என நேற்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த மனு மீதான விசாரணை மீண்டும் அன்றைய தினம் விசாரிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory