» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விகிதங்களை நீக்க நிதியமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 5:39:23 PM (IST)
ஜிஎஸ்டி முறையில் 12% மற்றும் 28% வரி அடுக்கை நீக்கும் பரிந்துரைக்கு நிதியமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் முறைமுக வரியை எளிமைப்படுத்தக் கடந்த 2017ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டி வரி முறை வந்த பிறகு இப்போது அனைத்து மாநிலங்களிலும் ஒரே முறையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதில் பல்வேறு அடுக்குகள் இருப்பதால் ஜிஎஸ்டி வரி முறையை எளிமையாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஜிஎஸ்டி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து மத்திய அரசும் 12% மற்றும் 28% வரி அடுக்கை நீக்கப் பரிந்துரை அளித்திருந்தது. இதற்கிடையே இந்த பரிந்துரைக்கு ஜிஎஸ்டி அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக இது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்மொழியப்படும். அடுத்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது இது அங்கு முன்மொழியப்படும். அங்கும் இதற்கான ஒப்புதல் கிடைத்தால், இதன் மூலம் பல்வேறு பொருட்கள் மீதான வரி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் யாத்திரையில் துயரம்: நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் பலி
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:50:27 AM (IST)

பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:31:46 PM (IST)

கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:05:17 PM (IST)

எவ்வளவு நெருக்கடி வந்தாலும் விவசாயிகளை பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:00:03 AM (IST)

தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:38:50 PM (IST)

கர்ப்பிணி மனைவியை கொன்று துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவன்: நகரியில் பயங்கரம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:22:44 AM (IST)
