» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் அனுமன் : அனுராக் தாக்குர் பேச்சு! கனிமொழி கண்டனம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 10:56:56 AM (IST)

விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் அனுமன் என்று பேசிய அனுராக் தாக்குருக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹிமச்சல் பிரதேசம் ஹமீர்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குர், தேசிய விண்வெளி நாளையொட்டி, உனாவில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய காணொலியை அனுராக் தாக்குர் அவரது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், முதல் விண்வெளி வீரர் யார்? என்று மாணவர்களிடம் கேள்வி கேட்ட அனுராக், மாணவர்களின் பல்வேறு பதில்களைத் தொடர்ந்து, அனுமன்தான் முதல் விண்வெளி வீரராக இருக்க முடியும் என நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "நாம் இன்னும் நிகழ்காலத்தில் நடப்பதையே காண்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் நமது பாரம்பரியம், அறிவு, கலாச்சாரம் ஆகியவற்றை நாம் அறியாத வரை, ஆங்கிலேயர்கள் நமக்கு காட்டியதைதான் நாம் பேசுவோம்.
பாடப்புத்தகங்களை தாண்டி, நமது தேசத்தின் மரபுகள், அறிவுகளைப் பார்க்குமாறு பள்ளியின் முதல்வர் மற்றும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அந்த கோணத்தில் பார்த்தால், நீங்கள் நிறைய விஷயங்களைக் காண்பீர்கள்” எனத் தெரிவித்தார்.
கனிமொழி கண்டனம்
அனுராக் தாக்குரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதிவிட்டிருப்பதாவது:
”நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஒருவர், பள்ளி மாணவர்களிடம் நிலவில் முதன்முதலில் கால் வைத்தது நீல் ஆம்ஸ்ட்ராங் அல்ல, அனுமன் என்று கூறுவது மிகவும் கவலையளிக்கிறது.
அறிவியல் என்பது கட்டுக்கதை அல்ல. வகுப்பறைகளில் இளம் மனங்களை தவறாக வழிநடத்துவது நமது அரசியலமைப்பில் பொதிந்துள்ள அறிவு, பகுத்தறிவு மற்றும் அறிவியல் மனப்பான்மையை அவமதிப்பதாகும்.
இந்தியாவின் எதிர்காலம், உண்மையையும் கட்டுக்கதையையும் சேர்த்து குழப்பிக் கொள்ளாமல், ஆர்வத்தை வளர்ப்பதில்தான் உள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் யாத்திரையில் துயரம்: நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் பலி
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:50:27 AM (IST)

பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:31:46 PM (IST)

கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:05:17 PM (IST)

எவ்வளவு நெருக்கடி வந்தாலும் விவசாயிகளை பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:00:03 AM (IST)

தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:38:50 PM (IST)

கர்ப்பிணி மனைவியை கொன்று துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவன்: நகரியில் பயங்கரம்
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 11:22:44 AM (IST)
