» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பொய் வழக்குகள்: வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:56:38 AM (IST)

லக்னோவில் சொத்து தகராறு காரணமாக பக்கத்து வீட்டுக்காரர் மீது போலி வழக்குகளைப் பதிவு செய்த வக்கீலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த வக்கீல் பரமானந்த குப்தா என்பவருக்கும், பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பரமானந்த குப்தா, ஒரு இளம்பெண் மூலமாக பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது பொய் வழக்குகள் தொடர்ந்து உள்ளார்.

அந்த பெண்ணுடன் இணைந்து, தனது சொந்த பெயரில் 18 புகார்களையும், பெண் மூலம் 11 புகார்களையும் பதிவு செய்தார். இந்த பொய் புகார்களில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அடங்கும். இந்த புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. போலீசார் விசாரணையில் இளம்பெண் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்று கண்டறியப்பட்டது. 

பூஜா ராவத் தொடர்ந்த புகார்கள் தொடர்பாக கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த 4-ந்தேதி அந்த இளம்பெண்ணுக்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் மாவட்ட கோர்ட்டு, வக்கீல் பரமானந்த குப்தாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5.10 லட்சம் அபராதமும் விதித்தது. மேலும் அவர் வக்கீல் தொழில் செய்யவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.


மக்கள் கருத்து

m.sundaramAug 24, 2025 - 04:55:20 AM | Posted IP 104.2*****

Good and exemplary Judgement.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory