» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா - ரஷ்யா உறவு வலுவானது: டிரம்ப் எச்சரிக்கை குறித்து இந்தியா கருத்து!
சனி 2, ஆகஸ்ட் 2025 12:32:14 PM (IST)
இந்தியா - ரஷ்யா உறவு மூன்றாம் நாட்டின் தலையிட்டால் பாதிக்கப்படாது என்று மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறியபோது, ‘‘இந்தியா - ரஷ்யா உறவு வலுவானது. மூன்றாம் நாட்டின் தலையிட்டால் இந்த உறவு பாதிக்கப்படாது. இதேபோல இந்தியா - அமெரிக்கா உறவும் வலுவடைந்து வருகிறது. நாட்டின் நலனுக்கு தேவையான பாதுகாப்பு கொள்கையை கடைபிடித்து வருகிறோம்’’ என்றார்.
அமெரிக்கர்களின் வீட்டு செலவு அதிகரிக்கும் இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு நடவடிக்கையால் ஏற்படும் பணவீக்கம் காரணமாக அமெரிக்காவில் சராசரி குடும்பத்தினரின் வீட்டு செலவு ஆண்டுக்கு 2,400 டாலர்வரை அதிகரிக்கும். அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மின்னணு பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், நுகர்வோர் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும் என்று கூறப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் பிஹாரிக்கள் கொல்லப்பட்ட போது ஸ்டாலின் எங்கே போனார்? - பிரசாந்த் கிஷோர் கேள்வி
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 3:47:00 PM (IST)

காஷ்மீர் வைஷ்ணோ தேவி கோவில் யாத்திரையில் துயரம்: நிலச்சரிவில் சிக்கி 34 பக்தர்கள் பலி
வியாழன் 28, ஆகஸ்ட் 2025 8:50:27 AM (IST)

பீகாரில் ராகுல் காந்தி நடைபயணம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:31:46 PM (IST)

கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கு: நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
புதன் 27, ஆகஸ்ட் 2025 12:05:17 PM (IST)

எவ்வளவு நெருக்கடி வந்தாலும் விவசாயிகளை பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!
புதன் 27, ஆகஸ்ட் 2025 11:00:03 AM (IST)

தமிழகத்தில் கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:38:50 PM (IST)
