» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
என்னை பழிவாங்க அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவி விடுகிறது: ராபர்ட் வாத்ரா குற்றச்சாட்டு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:11:26 PM (IST)
"என்னை பழிவாங்க மத்திய அரசு அமலாக்கத் துறையை ஏவி விடுகிறது" என்று பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ரா கூறினார்.

கடந்த 2018ல் குருகிராமில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்ட விரோத பண பரிமாற்றம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் வட்டியில்லாமல் ரூ.65 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை ஏப்.8ல் ஒரு சம்மன் அனுப்பியது. தற்போது 2வது சம்மன் அனுப்பி உள்ளது. ஆனாலும் வாத்ரா ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் இன்று ஆஜரானார்.
முன்னதாக பேசிய ராபர்ட் வாத்ரா, ''இது எனக்கு எதிராக மத்திய அரசின் சதி திட்டம். என்னை பழிவாங்க அரசு இயந்திரத்தை ஏவி விடுகிறது. நான் எப்போதெல்லாம் மக்களுக்காக பேசுகிறேனோ, அப்போதெல்லாம் என் வாயை மூட இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏர் இந்தியா என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!
சனி 12, ஜூலை 2025 10:17:14 AM (IST)

தேர்தல் ஆணையம் பாஜக நலனுக்காக வேலை செய்து கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 11, ஜூலை 2025 3:47:41 PM (IST)

75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
வெள்ளி 11, ஜூலை 2025 12:44:15 PM (IST)

இந்திரா காந்தி அமல்படுத்திய அவசர நிலை ஒரு கருப்பு அத்தியாயம்: சசி தரூர் விமர்சனம்!!
வெள்ளி 11, ஜூலை 2025 10:58:09 AM (IST)

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 பேருக்கு தூக்குத்தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 11, ஜூலை 2025 8:23:20 AM (IST)

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் திட்டவட்டம்
வியாழன் 10, ஜூலை 2025 4:51:19 PM (IST)
