» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கார்-பஸ் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி: மகா கும்ப மேளாவுக்கு சென்றபோது சோகம்!

சனி 15, பிப்ரவரி 2025 5:18:38 PM (IST)



உத்தரபிரதேசத்தில் கார்-பஸ் மோதிய விபத்தில் கும்பமேளாவுக்கு சென்ற 10 பக்தர்கள் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடந்து வரு கிறது. இதில் தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். சத் தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் ஒரு காரில் கும்ப மேளாவுக்கு புறப்பட்டு சென்றனர். உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் பிர யாக்ராஜ் நெடுஞ்சாலையில் நேற்று இரவு கார் சென்று கொண்டிருந்தது. 

அப்போது எதிரே வந்த பஸ் கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார் முழுவதும் நொறுங்கியது. அதில் இருந்து பக்தர்கள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பஸ்சில் இருந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் 19 பேர் படுகாயம் அடைந்தனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக பிர யாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த னர். மேலும் பலியானவர்கள் உடல்களை ஸ்வரூப் ராணி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். பலி யானவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை கும்பமேளாவுக்கு சென்ற ஆந்திராவை சேர்ந்த பக்தர் கள் 7 பேர் லாரி விபத்தில் சிக்கி இறந்தனர்.

இதே போல் ஆக்ராவை சேர்ந்த கணவன், மனைவி காரில் சென்ற போது லாரி மோதி இருந்தனர். மேலும் ஒரு விபத்தில் ஒடிசாவை சேர்ந்த பக்தர் ஒருவர் பலியாகி உள்ளார். தொடர் விபத்து காரணமாக பக்தர் கள் பலியாவதை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென உத்தர பிரதேச மாநில போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மகா கும்ப மேளாவில் நேற்று ஒரே நாளில் 92 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர். இதனால் மகா கும்ப மேளாவில் மொத்த பக்தர்கள் வருகை 50 கோடியை தாண்டி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory