» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தி.மு.க. எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என பேச்சு: மத்திய அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்
திங்கள் 10, மார்ச் 2025 8:25:51 PM (IST)

தி.மு.க. எம்.பி.க்களை பார்த்து அநாகரீகமானவர்கள் என்று மத்திய அமைச்சர் பேசியதற்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து தர்மேந்திர பிரதான் உடனடியாக கருத்தை திரும்ப பெற்றார்.
பாராளுமன்ற மக்களவை 12 மணிக்கு மீண்டும் கூடி யது. அப்போது தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசுகையில் கூறியதாவது: தி.மு.க. எம்.பி.க்களை அநாகரீகமானவர்கள் என மத்திய அமைச்சர் பேசியது வருத்தம் அளிக்கிறது. தமிழக எம்.பி.க்களையும் தமிழக மக்களையும் நாகரீக மற்றவர்கள் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது என்னை புண் படுத்தியது. மும்மொழி கொள்கையை தி.மு.க. எம்.பி.க்கள் ஒரு போதும் ஏற்பதாக கூறவில்லை.
சர்வ சிக்ஷா அபியான் திட்ட நிதியை விடுவிக்கவே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழக எம்.பி.க்களுடன் சென்று சந்தித்தேன். புதிய தேசிய கல்வி கொள்கையில் சில பிரச்சினைகள் இருக்கிறது. எனவே முழுமையாக ஏற்க முடியாது என தெளிவாக கூறினோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தெளிவாக கூறி விட்டார். தமிழக அரசுக்கான நிதியை கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் தனது கடிதத்தில் கூறி உள்ளார். இவ்வாறு அவர் பேசி னார்.
தி.மு.க. எம்.பி.க்களை பார்த்து அநாகரீகமான வர்கள் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு கனிமொழி எம்.பி. கடும் எதிர்ப்பு தெரி வித்ததை தொடர்ந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதை உடனடியாக திரும்ப பெற்றார்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், "தமிழக எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என்று கூறிய வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். நாகரீகமற்றவர்கள் என பேசியது புண்படுத்தி இருந்தால் அதை திரும்ப பெறுகிறேன். தி.மு.க. எம்.பி.க்கள் அவையில் கத்தக் கூடாது. ஒப்புக் கொண்ட விஷயத்தை முதலில் நிறைவேற்ற தமிழக அரசு அரசு முன்வர வேண்டும்” என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி : பிரதமர் மோடி பெருமிதம்
திங்கள் 22, டிசம்பர் 2025 12:35:30 PM (IST)

நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு : டிசம்பர் 26ஆம் தேதி முதல் அமல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:33:37 AM (IST)

அணுசக்தித் துறையில் தனியார்: மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
திங்கள் 22, டிசம்பர் 2025 10:17:30 AM (IST)

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு: இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:34:40 PM (IST)

அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி மசோதா நிறைவேற்றம்: பிரதமர் வரவேற்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:59:35 AM (IST)

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் பரபரப்பு - 160 பயணிகள் உயிர் தப்பினர்
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:28:53 AM (IST)


.gif)
ஆமாMar 11, 2025 - 08:36:59 AM | Posted IP 104.2*****