» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அணை கட்ட அனுமதிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் படங்கள் ஓடாது: வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

சனி 8, மார்ச் 2025 4:57:02 PM (IST)

மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதிக்காவிட்டால் கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என கன்னட அமைப்பை சேர்ந்த வாட்டாள் நாகராஜ் மிரட்டல் விடுத்துள்ளார். 

கர்நாடக சட்டசபையில் பட்ஜெட் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிரமாக முயன்று வருவது தெரிகிறது. 

இந்த நிலையில் இது குறித்து தமிழக நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன், "தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் தலைகீழாக நின்றாலும் கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது என பதிலடி கொடுத்துள்ளார். இந்த நிலையில் மேகதாது அணையை கட்ட வலியுறுத்தி தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது வாட்டாள் நாகராஜ் கூறுகையில் மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் அனுமதிக்கவில்லை என்றால் தமிழ் படங்கள் ஓடாது. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவே மேகதாது அணை கேட்கிறோம் என நாகராஜ் தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory