» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டம்: முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
புதன் 12, பிப்ரவரி 2025 11:39:44 AM (IST)
ஆந்திராவில் பெண்களுக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தினை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில், "இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்தத் துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறேம். அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திரா முனைப்பாக உள்ளது. வேலை வீட்டில் செய்தல், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் COWORKING SPACE எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐ.டி. அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐ.டி. நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: குஜராத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
புதன் 19, மார்ச் 2025 4:26:40 PM (IST)

தெஹுலி 24பேர் கொலை வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை: 44 ஆண்டுக்குப் பின் தீர்ப்பு
புதன் 19, மார்ச் 2025 10:24:38 AM (IST)

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 5:33:56 PM (IST)

உங்களை இந்தியாவில் சந்திக்க காத்திருக்கிறேன்: சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி கடிதம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 4:25:39 PM (IST)

கர்நாடகாவில் ரூ.275 கோடி போதை பொருள் சிக்கியது: 2 வெளிநாட்டு பெண்கள் கைது
திங்கள் 17, மார்ச் 2025 9:20:25 PM (IST)

டெல்லி பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
திங்கள் 17, மார்ச் 2025 5:34:02 PM (IST)
