» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பு!
சனி 31, ஜனவரி 2026 5:32:04 PM (IST)
விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் விட்டு சென்ற துணை முதல்வர் பதவியை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்று உள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கணவர் அஜித் பவாருக்கு பதில் துணை முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் அடுத்த 6 மாதத்தில் அஜித் பவார் வென்ற பாரமதி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் களமிறங்கி போட்டியிட்டு எம்எல்ஏ ஆகவும் திட்டமிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கணவர் அஜித் பவாருக்கு பதில் துணை முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். சுனேத்ரா பவார் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள நிலையில் அடுத்த 6 மாதத்தில் அஜித் பவார் வென்ற பாரமதி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் களமிறங்கி போட்டியிட்டு எம்எல்ஏ ஆகவும் திட்டமிட்டுள்ளார்.
அவருக்கு மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கலால் துறை மற்றும் விளையாட்டு துறை அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதேவேளையில் அஜித் பவார் நிர்வகித்த நிதித்துறையை தேவேந்திர பட்னாவிஸ் வைத்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தற்போது மாநிலங்களவை எம்.பியாக உள்ளார். சுனேத்ரா பவார் அக்டோபர் 18, 1963 அன்று மகாராஷ்டிராவின் தாராஷிவ்வில் பிறந்தார். சுனேத்ரா பவாருக்கு 1985-ல் அஜித் பவாருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்: பார்த் பவார், 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஜெய் பவார், ஒரு தொழிலதிபர். குடும்பத்தை கவனித்துக் கொள்வதோடு, கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களையும் நிர்வகித்து வருகிறார்.
கடந்த 2024ம் ஆண்டில் தான் அவர் அரசியலுக்குள் வந்தார். அப்போது அவர் தனது இளைய மாமனாரான சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து பாராமதி நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்கினார். இந்த தொகுதியில் சுப்ரியா சுலே 7 லட்சத்து 32 ஆயிரத்து 312 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். சுனேத்ரா பவார் 5,73,979 வாக்குகள் மட்டுமே பெற்று 1,58,33 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு தான் அவர் ராஜ்யசபா எம்பியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது
சனி 31, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஐ.டி ரெய்டின் போது பயங்கரம்!
சனி 31, ஜனவரி 2026 11:44:42 AM (IST)

பள்ளிகளில் இலவச நாப்கின் கிடைக்க மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்: மீறினால் பள்ளி அங்கீகாரம் ரத்து!
சனி 31, ஜனவரி 2026 10:37:36 AM (IST)

பெண் கமாண்டோ படுகொலை : வரதட்சணை விவகாரத்தில் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 30, ஜனவரி 2026 4:56:57 PM (IST)

யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
வெள்ளி 30, ஜனவரி 2026 10:30:01 AM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 29, ஜனவரி 2026 5:23:49 PM (IST)

