» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் தலைவர் கைது
சனி 31, ஜனவரி 2026 5:04:51 PM (IST)

ரூ.40 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் புனித் கார்க்கை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் வங்கிகளில் ரூ.40 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி மற்றும் பண முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல், நிதி திசை திருப்பல்களில் ஈடுபட்டதால் அது மோசடியாக வரையறுக்கப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. விசாரணை நடத்திவருகிறது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், இயக்குனருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர் கைது செய்யப்பட்டதாக நேற்று அறிவித்த அமலாக்கத்துறை, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அவரை 9 நாள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதித்து உத்தரவிட்டது. 2 நாட்களுக்கு முன்னதாக புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளை அமலாக்கத்துறை முடக்கியது.
"புனித் கார்க், 2001 முதல் 2025 ஆண்டு வரை நீண்ட காலமாக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தில் மூத்த மேலாண்மை இயக்குநர் பதவி வகித்தபோது,மேற்கூறிய வங்கி மோசடியிலிருந்து பெறப்பட்ட வருமானத்தை கையகப்படுத்துதல், வைத்திருத்தல், மறைத்தல், பல அடுக்குகளாகப் பிரித்தல் மற்றும் சிதறடித்தல் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்," என்று அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்பு!
சனி 31, ஜனவரி 2026 5:32:04 PM (IST)

பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: ஐ.டி ரெய்டின் போது பயங்கரம்!
சனி 31, ஜனவரி 2026 11:44:42 AM (IST)

பள்ளிகளில் இலவச நாப்கின் கிடைக்க மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்: மீறினால் பள்ளி அங்கீகாரம் ரத்து!
சனி 31, ஜனவரி 2026 10:37:36 AM (IST)

பெண் கமாண்டோ படுகொலை : வரதட்சணை விவகாரத்தில் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 30, ஜனவரி 2026 4:56:57 PM (IST)

யுஜிசியின் புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை: மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
வெள்ளி 30, ஜனவரி 2026 10:30:01 AM (IST)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 29, ஜனவரி 2026 5:23:49 PM (IST)