» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்த தேவையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:11:04 PM (IST)

லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. .

லாட்டரி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்துவதற்கு எதிராக சிக்கிம் உயர்நீதிமன்றத்தில் ஃபியூச்சர் கேமிங் சொல்யூஷன்ஸ் என்ற லாட்டரி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சிக்கிம் உயர் நீதிமன்றம், லாட்டரி என்பது அரசியலமைப்பின் மாநிலப் பட்டியலில் உள்ள 62வது பிரிவில் "பந்தயம் மற்றும் சூதாட்டம்" என்ற சொற்றொடரின் கீழ் வருவதாகவும், மாநில அரசு மட்டுமே வரி விதிக்க முடியும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து, மத்திய அரசுத் தரப்பில் 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கியது.

அரசியலமைப்பின் 62வது பிரிவின் கீழ் மாநிலத்தால் விதிக்கப்படும் சூதாட்ட வரி மட்டுமே லாட்டரி நிறுவனங்கள் செலுத்தினால் போதும், மத்திய அரசின் சேவை வரி செலுத்த தேவையில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், லாட்டரி சீட்டுகளை வாங்குபவருக்கும் நிறுவனத்துக்கும் இடையேயான பரிவர்த்தனைகளில் சேவை வரி விதிக்க முடியாது என்றும் மத்திய அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory