» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மார்ச் 24, 25-ல் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சங்கம் முடிவு!

சனி 8, பிப்ரவரி 2025 10:24:50 AM (IST)

வாரத்துக்கு 5 நாட்கள் வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி மார்ச் 24, 25ல் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் முடிவு செய்துள்ளது. 

வாரத்துக்கு 5 நாட்கள் வேலை மற்றும் வங்கித்துறையில் அனைத்து நிலைகளிலும் போதுமான பணியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி தொழிற்சங்கங்கள் மார்ச் 24 -ம் தேதி முதல் நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.

முன்னதாக இந்திய வங்கிகள் சங்கத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பிரச்சினைகளைத் தீர்க்கவும், அரசு ஊழியர்களுக்கான திட்டத்தின்படி, வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதோடு, பணிக்கொடையை ரூ.25 லட்சமாக உயர்த்தவும் வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் 24 மற்றும் 25-ந்தேதிகளில் நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலை நிறுத்தம் செய்ய வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றம் முடிவு செய்துள்ளது. தங்கள் கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்களுக்குப்பின் இந்த வேலை நிறுத்த முடிவை எடுத்துள்ளதாக அந்த மன்றம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய மன்றத்தில் 9 சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன. அந்தவகையில் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம், அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களின் தேசிய கூட்டமைப்பு, அனைத்து இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய சங்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory