» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் : பிரதமர் மோடி பெருமிதம்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 5:42:17 PM (IST)
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் முன்வைத்த கேள்விகளுக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதில் அளித்து பேசியதாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 10 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் சேவையாற்றுவதற்காக மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். 14-வது முறையாக அவையில் பேசுவதற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி உரையில் இருந்தன. சாமானிய, நடுத்தர மக்களை முன்னேற்றிக்கொண்டு வந்துள்ளது பாஜக அரசு. ஏழை மக்களின் நிலையை அரசு புரிந்து கொண்டுள்ளது. வீடில்லாத 4 கோடி பேர் வீடு பெற்றுள்ளனர். ஏழைகள் மழைக்காலத்தில் கூரையின்றி அவதிப்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
5 ஆண்டுகளில் 12 கோடி இல்லங்களுக்கு குழாய்களில் குடிநீர் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் வறுமை மறைந்துள்ளது. வறுமையை ஒழித்துள்ளோம். சிலர் ஏழை மக்களின் இல்லங்களில் புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள். மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை கொண்டு சேர்ப்பதே அரசியல் கட்சிகளின் வேலை, கள நிலவரத்தை அறிந்தவர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யும்போது மாற்றம் உண்டாகிறது என்றார்.