» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் கடும் பனிமூட்டம்; விமானங்கள், ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி!
வெள்ளி 24, ஜனவரி 2025 12:39:13 PM (IST)

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள், ரயில்கள் வருகை தாமதமானதால் பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால், விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாகியுள்ளது. கடும் பனிமூட்டம், போதிய வெளிச்சமின்மை காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை பல விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளார்.
டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது; புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது. டெல்லியில் பனிமூட்டம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 11°செல்சியசாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஜெயலலிதாவின் நகைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரிய ஜெ.தீபா தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 5:40:04 PM (IST)

இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி அறிமுகம்!
வெள்ளி 14, பிப்ரவரி 2025 3:36:04 PM (IST)

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
வெள்ளி 14, பிப்ரவரி 2025 11:44:27 AM (IST)

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:20:59 PM (IST)

நாடு கடத்தல் குறித்து டிரம்ப்பிடம் கேட்க பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ளதா? காங்கிரஸ் கேள்வி
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:10:48 PM (IST)

பிரதமர் மோடி பயணிக்கும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - மும்பை போலீஸ் விசாரணை
வியாழன் 13, பிப்ரவரி 2025 12:51:45 PM (IST)
