» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கொலை : 3பேர் கைது!

வெள்ளி 24, ஜனவரி 2025 11:15:45 AM (IST)

புனேவில் சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கொன்று விபத்து நாடகமாடிய சிறுமியின் தாய் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மராட்டிய மாநிலம் புனே பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (25). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவர்கள் தினேஷ், ஆதித்யா ஷிண்டே ஆகியோர் பாலாஜி விபத்தில் சிக்கியதாக கூறி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி உயிரிழந்தார்.

இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் பாலாஜி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை அழைத்து வந்த ஆட்டோ டிரைவர்கள் தினேஷ், ஆதித்யா ஷிண்டேவை பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது கொலையான பாலாஜி, காதலியான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், இதன் காரணமாக சிறுமி மனஉளைச்சல் அடைந்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் ரேகா, பாலாஜியை கொலை செய்ய சதி திட்டம் போட்டார். கடந்த 17-ந்தேதி சிறுமியின் வீட்டிற்கு வந்த பாலாஜியை ரேகா தனது கூட்டாளிகளான ஆட்டோ டிரைவர்கள் தினேஷ், ஆதித்யா ஷிண்டே உள்பட 4 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பாலாஜியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று, அவர் விபத்தில் சிக்கியதாக கூறி நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் சிறுமியின் தாய், ஆட்டோ டிரைவர்கள் 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory