» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ் மொழியால் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை: பிரதமர் மோடி பெருமிதம்

திங்கள் 30, டிசம்பர் 2024 12:28:23 PM (IST)

தமிழ் மொழியால் இந்தியர்கள் அனைவருக்கும் பெருமை என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். 

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்​பேற்ற பிறகு மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்​சி​யில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்​கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி முதல் தொடங்கிய மனதின் குரல் நிகழ்ச்சி நேற்றுடன் 117-வது அத்தி​யா​யத்தை எட்டி​யுள்​ளது. இந்தாண்​டுக்கான கடைசி மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் பிரதமர் நரேந்திர மோடி பேசி​யுள்ள​தாவது: 

உலகிலேயே மிகவும் தொன்​மையான மொழி தமிழ் மொழி ஆகும். இது, இந்தியர்கள் அனைவருக்கும் பெரு​மித​மான, பெருமை சேர்க்​கும் விஷயம். உலகெங்​கிலும் உள்ள நாடு​களில் தமிழ் மொழியை படிப்​பவர்​களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிக ரித்து வருகிறது. கடந்த மாத இறுதி​யில் ஃபிஜி​யில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்​கப்​பட்​டது. கடந்த 80 ஆண்டு​களில் ஃபிஜி​யில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மொழியை பயிற்று​விப்பது இதுவே முதல்​முறை. 

ஃபிஜி மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்​சா​ரத்​தை​யும் கற்றுக்​கொள்வ​தில் அதிக ஆர்வம் காட்டு​கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சம்பவங்கள் வெறும் வெற்றிக் கதை அல்ல. நம்மை பெரு​மிதத்​தால் நிரப்பு​பவை. மொழி, இசை, கலை, ஆயுர்​வேதம் என பாரதத்​தில் அனைத்​தும் கொட்​டிக்​கிடக்​கிறது. அதனால்​தான் இந்தியா உலகள​வில் முத்​திரை பதித்​துக் கொண்​டிருக்​கிறது.

எதிர் வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி​யன்று நமது அரசி​யலமைப்பு சட்டத்​தின் 75-வது ஆண்டு நிறைவடைய இருக்​கிறது. இது, நம் அனைவருக்​கும் கவுர​வ​மிகு தருணமாகும். நமது அரசி​யலமைப்பு சட்ட பிதாமகர்கள் நம்மிடம் ஒப்படைத்​திருக்​கும் அரசி​யலமைப்பு அனைத்து காலகட்​டங்​களி​லும் நமக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்​கு​கிறது. அந்த பாதை​யில் நாம் தொடர்ந்து பயணித்து வருகிறோம். இந்த அரசி​யல்​சட்​டத்​தால்​தான் நான் இங்கு உங்களோடு உரையாடிக் கொண்​டிருக்​கிறேன். தேசத்​தின் குடிமக் கள் அனைவரும் அரசி​யலமைப்​பின் பெரு​மைகளை உணர constitution75.com என்ற பெயரில் ஒரு சிறப்பு இணையதளம் உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் மூலம் பல்வேறு மொழிகளில் அரசியல் சட்டத்தை வாசித்து பொது​மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்​கலாம். குறிப்​பாக, பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்க வேண்​டும் என்பது எனது விருப்​பம்.

அடுத்த மாதம் 13-ம் தேதி முதல் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்​ராஜில் மகா கும்​பமேளா நடைபெற​விருக்​கிறது. இதற்கான ஏற்பாடுகள் சங்கமத்​தின் கரையில் தடபுடலாக நடந்​தேறி வருகின்றன. இந்த கும்​பமேளா​வின்​போது ஒற்றுமை, உறுதிப்​பாட்டை மனதில் ஏந்தி வீடு திரும்​புவோம். சமுதா​யத்​தில் பிரி​வினை மற்றும் வெறுப்பு​ணர்​வுக்கு முடிவு​கட்டும் உறுதிப்​பாட்​டை​யும் ஏற்போம். 2014-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட மனதின் குரல் தேசத்​தின்

சமூக சக்​தி​யின் உயிர்ப்புடைய ஆவணமாக மாறி​யிருக்​கிறது. தேசத்​தின் மூலை​முடுக்​கெல்​லாம் பரவி​யிருக்​கும் ஆக்கப்​பூர்​வமான சக்தியை இந்நிகழ்ச்சி ஒருங்​கிணைக்​கிறது. இப்போது, 2025-ம் ஆண்டின் கதவை தட்டிக்​கொண்​டிருக்​கிறது. வரும் ஆண்டிலும் மனதின் குரல் வாயிலாக நாம் மேலும் உத்வேகம் அளிக்​கும் முயற்சி​களைப் பரிமாறிக் கொள்​வோம். அனை​வருக்​கும் 2025 புத்​தாண்​டு நல்​வாழ்த்து​கள். இவ்​வாறு பிரதமர்​ நரேந்திர மோடி பேசி​யுள்​ளார்​.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory