» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டிசம்பர் மாதத்தில் ரூ.1.77 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வசூல் : மத்திய நிதி அமைச்சகம் தகவல்

வியாழன் 2, ஜனவரி 2025 12:54:25 PM (IST)

கடந்த மாதம் (டிசம்பர் ) ரூ.1.77 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது, டிசம்பர் மாதம் ஈட்டப்பட்டுள்ள 1,77 லட்சம் கோடி ரூபாயில் மத்திய ஜி.எஸ்.டி ரூ. 32,836 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 7.3 சதவீதம் அதிகமாகும். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்தது.

உள்நாட்டு பரிவர்த்தனைகளின் ஜி.எஸ்.டி. 8.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.32 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மீதான வரி வருவாய் சுமார் 4 சதவீதம் அதிகரித்து ரூ.44,268 கோடியாகவும் உள்ளது. டிசம்பர் மாதத்தில், ரூ.22,490 கோடி மதிப்பிலான ரீபண்டுகள் வழங்கப்பட்டன, இது முந்தைய ஆண்டை காட்டிலும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. ரீபண்ட்களை சரிசெய்த பிறகு, நிகர ஜி.எஸ்.டி. வசூல் 3.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.54 லட்சம் கோடியாக இருந்தது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory