» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் சாலைப் பணிகளுக்கு ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு : நிதின் கட்கரி அறிவிப்பு

வெள்ளி 3, ஜனவரி 2025 5:12:31 PM (IST)

தமிழகத்தில் சாலைப் பணிகளுக்கு ரூ.87 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஈரோடு மாவட்டத்தில் எஸ்.எச்.20 சாலையை அகலப்படுத்த ரூ.36.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மேட்டுக்கடை- முத்தம்பாளையம் ரோடு அகலப்படுத்த 6.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் எஸ்.எச்., 154 அகலப்படுத்த 18.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி மாவட்டங்களில், மேகளத்துார் - பத்தாளப்பேட்டை ரோடு அகலப்படுத்த 20.52 கோடி ரூபாயும், திண்டுக்கல் மாவட்டத்தில் தருமத்துப்பட்டி -ஆடலுார் - தாண்டிக்குடி ரோடு அகலப்படுத்த 5.8 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் மூலம் உள்ளூரில் போக்குவரத்து வசதிகள் மேம்பட்டு, பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும்; சமூக, பொருளாதார வாய்ப்புகள் அதிகரிக்கும் என கட்கரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory