» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி : பிரசாந்த் கிஷோர் கண்டனம்!

ஞாயிறு 29, டிசம்பர் 2024 8:36:07 PM (IST)



பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

பீகாரில் டிச. 13ஆம் தேதி நடந்த ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பீகார் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (பிபிஎஸ்சி) தேர்வர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணையத்தின் முன்பு நேற்று (டிச. 28) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில், இன்று தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி திடலில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் நேரில் சென்று சந்தித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய பிரசாந்த் கிஷோர், நாங்கள் போராட்டத்தில் ஈடுபட இங்கு வரவில்லை. மாணவர்கள் இங்கு அமர்ந்துள்ளனர்; அவர்களை சந்திக்கச் சென்றோம். காந்தி திடல் பொதுவான ஓர் இடம். மாணவர்கள் சென்று முறையிட வேறு எந்த இடமும் இல்லாதபட்சத்தில், அவர்கள் பொது இடத்தில் கூடுகின்றனர். 

தேர்வர்கள் விவகாரத்தை மாநில அரசு ஏன் தன்மானப் பிரச்னையாகப் பார்க்கிறது என்று தெரியவில்லை.  இது அவர்களையே அவர்கள் காயப்படுத்திக்கொள்வதற்குச் சமம். ஜனநாயகத்தின் தாயாக இருப்பது பீகார் மாநிலம். மாணவர்கள் தங்கள் மனதில் எழுந்ததைப் பேச உரிமையில்லை என்றால், அது லத்தி தந்திரம். அமைதியான முறையில் போராடுபவர்களை தடியடி நடத்தியா கலைப்பது. அதனால்தான் அவர்களுக்கு ஆதரவு நாங்கள் நிற்கிறோம் என பிரஷாந்த் கிஷோர் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory