» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்

செவ்வாய் 31, டிசம்பர் 2024 10:30:39 AM (IST)

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது.

இந்தியாவின் கனவுத் திட்டமான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்காக பல்வேறு பரிசோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது. விண்ணில் செயற்கைக்கோள் களை ஒன்றாக இணைக்கும் நவீன தொழில்நுட்ப அறிவு அதாவது 'விண்வெளி டாக்கிங் பரிசோதனை' என்ற பணிக்காக இஸ்ரோ 'சேசர்' (ஸ்பேடெக்ஸ்-ஏ), 'டார்கெட்' (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை வடிவமைத்துள்ளது.

இது ஒவ்வொன்றும் 220 கிலோ எடை கொண்டதாகும். இதனை விண்ணில் வெவ்வேறு சுற்றுப்பாதையில் செலுத்தி, விண்வெளியில் 2 செயற்கைக் கோள்களையும் இணைய வைக்கும் கடுமையான பரிசோதனையை நிகழ்த்த உள்ளது.

இதற்காக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இறுதிக்கட்டப்பணியான 25 மணி நேர கவுண்ட்டவுனை முடித்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் 2 செயற்கைக்கோள்களை சுமந்தப்படி நேற்று இரவு 10 மணி 15 வினாடிக்கு தீப்பிழம்பை கக்கியப்படி விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. திட்டமிட்டபடி ராக்கெட்டின் இரு பாகங்கள் அடுத்தடுத்து பிரிந்தது.

ராக்கெட் பூமியில் இருந்து புறப்பட்ட 15 நிமிடம் 15 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-பி செயற்கைக்கோள் 475 கிலோ மீட்டரிலும், 15 நிமிடம் 20 வினாடிகளில் ஸ்பேடெக்ஸ்-ஏ செயற்கைக்கோள் 476 கிலோ மீட்டரிலும் வெவ்வேறு சுற்றுப்பாதையில் திட்டமிட்ட இலக்கில் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் கூடியிருந்த விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்.

ராக்கெட் ஏவும் நேரம் 2 நிமிடம் ஒத்திவைத்தது ஏன்?

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர். இந்தநிலையில் சுமார் 16 மணி நேரம் கவுண்ட்டவுன் முடிந்த நிலையில் ராக்கெட் ஏவும் நேரம் 2 நிமிடம் 2 வினாடிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

பொதுவாக விண்வெளி கழிவுகள் குறிப்பிட்ட நேரத்தில் கடந்து செல்லும்போது அதில் செயற்கைக்கோள்கள் மோதி சேதமடைந்துவிடக் கூடாது என்பதற்காக ராக்கெட் ஏவும் நேரம் ஒத்திவைக்கப்படும். ஆனால் நேற்று பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்காக திட்டமிட்டு இருந்த நேரத்தில், அதே சுற்றுவட்டப்பாதையில் வேறு செயற்கைக்கோள் கடந்து சென்றதால், அதில் மோதுவதை தவிர்க்க பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் ஏவும் நேரம் 2 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory