» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு டிசம்பர் 20-ல் இடைத்தேர்தல்!
செவ்வாய் 26, நவம்பர் 2024 5:31:15 PM (IST)
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இவற்றில் ஆந்திர பிரதேசத்தில், வெங்கடரமணா ராவ் மொபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் ரியாகா கிருஷ்ணையா ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்டில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர். இதனால், அந்த 3 இடங்களும் காலியாக உள்ளன. இதில், யாதவ் மற்றும் கிருஷ்ணையா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பதவி காலம் 2028-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதியுடன் முடிவடைகிறது. மொபிதேவியின் பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந்தேதி முடிகிறது.
ஒடிசாவில், பிஜு ஜனதா தள கட்சியில் இருந்து சுஜீத் குமார் வெளியேற்றப்பட்டதும் அந்த இடம் காலியாக உள்ளது. அவருடைய பதவி காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதேபோன்று, மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், அதனை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த ஜவகர் சர்கார் கடந்த செப்டம்பரில், எம்.பி. பதவியில் இருந்து விலகினார்.
அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரிஷன் லால் பன்வார், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும் எம்.பி. பதவியில் இருந்து விலகினார். இதனால், அந்த இடம் காலியாக இருக்கின்றது. இந்த சூழலில், காலியாக இருக்கின்ற இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒடிசாவில் பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் கை ஓங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

துணைவேந்தர் நியமன வழக்கு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!!
சனி 5, ஜூலை 2025 5:29:02 PM (IST)

இந்தி திணிப்புக்கு எதிராக 20 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த தாக்கரே சகோதரர்கள்!
சனி 5, ஜூலை 2025 3:58:09 PM (IST)

தாறுமாறாக வாகனம் ஓட்டி இறப்பவரின் குடும்பத்துக்கு இழப்பீடு இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 4, ஜூலை 2025 11:22:46 AM (IST)

மோடி அரசு, விவசாயிகளைக் கொன்று வருகிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வியாழன் 3, ஜூலை 2025 5:55:07 PM (IST)

நானே 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பேன்: சித்தராமையா திட்டவட்டம்!
புதன் 2, ஜூலை 2025 5:32:08 PM (IST)

முகம்மது ஷமி முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு
புதன் 2, ஜூலை 2025 11:49:25 AM (IST)
