» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்துவிட்டது: ஜெய்சங்கர்

சனி 31, ஆகஸ்ட் 2024 11:18:13 AM (IST)

பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் தடையற்ற பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கான காலம் முடிந்துவிட்டதாகவே கருதுகிறேன். ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவுகள் உள்ளன. ஜம்மு-காஷ்மீரை பொருத்தவரை, அந்த யூனியன் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-ஆவது சட்டப் பிரிவு முடிந்துபோன விவகாரமாகும். எனவே இனி பாகிஸ்தானுடன் என்ன மாதிரியான உறவைப் பராமரிக்கலாம் என்பதே தற்போதைய கேள்வி.

பாகிஸ்தான் உடனான உறவைப் பொறுத்தவரை, தற்போதுள்ள நிலையை தொடர்வதில் இந்தியா திருப்தி அடையலாம் என்று ராஜீவ் சிக்ரி தனது புத்தகத்தில் பரிந்துரைத்துள்ளார். சில நேரங்களில் ஆம் என்றும், சில நேரங்களில் இல்லை என்றும் இதற்கு பதில் சொல்லலாம். அமைதியாக இருப்பவர்கள் அல்ல நாங்கள். நிகழ்வுகள் நேர்மறையாக இருந்தாலும் எதிர்மறையாக இருந்தாலும் அதற்கு நாங்கள் எதிர்வினையாற்றுவோம்" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory