» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
திருப்பதியில் கூட்ட நெரிசலில் தமிழகத்தை சேர்ந்த 2பேர் உட்பட 6 பேர் உயிரிழப்பு: பிரதமர் இரங்கல்
வியாழன் 9, ஜனவரி 2025 11:20:53 AM (IST)

திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த 2பேர் உட்பட 6பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கன் இன்று (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்று (புதன்கிழமை) இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை என தகவல் கிடைத்துள்ளது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் தவித்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்: "திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். எனது எண்ணமெல்லாம் தங்கள் நெருங்கிய உறவுகளை இழந்து வாடுபவர்களுடன் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று காலை 11 மணி அளவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி வர உள்ளதாக தகவல். அவர் காயமடைந்தவர்களை நேரில் சந்திக்க உள்ளார். இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளில் ஆசிரியர்கள்: டெல்லி அரசின் உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு!
திங்கள் 29, டிசம்பர் 2025 5:29:38 PM (IST)

கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி!!
திங்கள் 29, டிசம்பர் 2025 4:15:11 PM (IST)

கூட்ட நெரிசலில் பெண் பலி: அல்லு அர்ஜுன் உள்பட 23 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
சனி 27, டிசம்பர் 2025 5:38:00 PM (IST)

ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம்: ஐஆர்சிடிசி அறிவிப்பு
சனி 27, டிசம்பர் 2025 3:48:59 PM (IST)

இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:01:58 PM (IST)

கிறிஸ்துமஸ் பொருள்களை அடித்து நொறுக்கிய சம்பவம்: இந்து அமைப்பினர் 4 பேர் கைது!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:08:11 PM (IST)



.gif)